தமிழகத்தில் கடந்த 2021-22 ஆம் ஆண்டில் 2586 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்திய அளவில் அதிக குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. கொரோனா காரணமாக கலந்த 2020 ஆம் ஆண்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காரணத்தால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் பலரும் வேலைக்குச் செல்லும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். இதன் காரணமாக ஊரடங்கு காலத்தில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது.

இந்நிலையில் இந்தியாவில் கடந்த ஆண்டு அதிக குழந்தைகள் மீட்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டில் மொத்தம் 13 ஆயிரத்து 271 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அதில் அதிகபட்சமாக 4,867 பேரும், தமிழகத்தில் 2586 பேரின் மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், குழந்தைகளுக்கு எதிரான வன்புணர்வு, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.