தமிழக அரசின் வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களுடைய பணி தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும் என்றும், இளநிலை வருவாய் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணை அடிப்படையில் விதி திருத்த ஆணையை வெளியிட வேண்டும் என்றும் பட்டதாரி இல்லாத பணி அலுவலர்களின் பணியிறக்க  பாதுகாப்பு அரசாணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கரூர் மாவட்டத்தில் காலவரையற்ற வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தமிழக அரசு பட்டதாரி அல்லாத அலுவலர்கள் பணியிறகத்தை ரத்து செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக வருவாய் துறை அலுவலர்களின் 10 கோரிக்கைகளில் ஒரு கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.