தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதே சமயம் மாணவர்கள் படிப்பை தாண்டி தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக அனைத்து பள்ளிகளிலும் அவ்வப்போது பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக அரசு பள்ளிகளில் கலை மற்றும் கலாச்சார வகுப்புகள் நடத்துவதற்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கலைத் திருவிழாவில் மாணவர்களை அதிக அளவில் பங்கேற்க செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 6ஆம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு வாரத்திற்கு இரு பாடவேளை கலை மற்றும் கலாச்சார வகுப்புகள் நடத்தப்படும். இதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாகவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.