இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் வங்கி கணக்குகளை விட தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் அதிக அளவு முதலீடு செய்ய தொடங்கிவிட்டனர். இந்திய தபால் நிலைய சேமிப்பு திட்டங்களையும் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் குறித்த விவரத்தையும் இந்த பதிவில் பார்க்கலாம் .

தபால் அலுவலக சேமிப்பு கணக்கு மூலமாக தனிநபர் மற்றும் கூட்டு கணக்குகளின் மூலம் 4 சதவீதம் வட்டி விகிதங்களை பெற முடியும். இந்த திட்டத்திற்கான குறைந்தபட்ச முதலீடு 500 ரூபாய் ஆகும் . சேமிப்பை பராமரிப்பதற்காக மாதத்திற்கு பத்து ரூபாய் கட்டாய இருப்பு அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்ட உள்ளது.

தேசிய சேமிப்பு தொடர் வைப்பு கணக்கு பயனர்களுக்கு பல வகையான அம்சங்களில் பலனை வழங்குகிறது. இதன் கீழ் தனி நபர் மற்றும் கூட்டு கணக்குகள் இரண்டுக்கும் வருடத்திற்கு 6 .50 வட்டி வழங்கப்படுகிறது.

தபால் அலுவலக நேர வைப்பு கணக்கு மூலமாக பயனர்களுக்கு 6.90% முதல் 7.50 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகின்றது. இந்த திட்டத்துக்கான குறைந்தபட்ச முதலீடு என்பது ஆயிரம் ரூபாயாகும்.

தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்ட கணக்கு மூலமாக 7.40% வட்டி பெறலாம்.  கணக்கை திறப்பதற்கு குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் 5 ஆண்டு திட்டத்தின் மூலம் செலுத்தப்படும் தொகைக்கு 8.20 சதவீதம் வட்டி வழங்கப்படும். குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயும் அதிகபட்சம் 35 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும்.

சுகன்யா சம்ரிதி கணக்கு மூலமாக வருடத்திற்கு 8% வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 250 ரூபாய் முதலீடு ஒரு நிதியாண்டில் அதிகபட்சம் 1.50 லட்சம் முதலீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.