தஞ்சைப் பெரிய கோவிலின் தரையில் பழைய செங்கற்களை அகற்றி, புதிய செங்கற்கள் பதிக்கும் பணியை இந்திய தொல்லியல் துறை செய்துவருகிறது. இப்பணிக்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கும் தமிழ்நாடு அரசுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என தமிழக உண்மை அரசின் உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது.

மேலும் 2018 ஆம் ஆண்டிலும் புதிய செங்கற்கள் பதிக்கும் பணியை ஒன்றிய தொல்லியல் துறை செய்துள்ளது. தஞ்சைக் கோவில் தரையை தமிழக அரசு நொறுக்குவதாக பரவிய தகவலையடுத்து இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த செயலுக்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கும், தமிழக அரசுக்கும் சம்மந்தம் இல்லை என கூறியுள்ளது.