டாஸ்மாக் நேரத்தை மாற்றும் திட்டம் ஏதும் இல்லை என்று அமைச்சர் முத்துசாமி பேசியிருக்கிறார். சில தினங்களுக்கு முன் பேட்டியளித்த அவர், அதிகாலை வேலைக்கு செல்வோர் காலையிலேயே டாஸ்மாக் கடைகளை திறக்க வலியுறுத்துவதாக கூறினார். இந்நிலையில் அப்படி எந்த திட்டமும் அரசிடம் இல்லை என்று அமைச்சர் பேசியிருக்கிறார். அதோடு 90 மில்லி அளவில் மதுவை விற்பனை செய்யும் திட்டமும் இல்லை என்று கூறிவிட்டார்.

மேலும் டாஸ்மாக் கடைகளுக்கு வரும் சிறுவர்களை கண்காணித்து கவுன்சிலிங் கொடுக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி உறுதியளித்துள்ளார். மதுபானங்களுக்கு 10 கூடுதலாக வாங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், மது வாங்குவதற்கு ரசீது முறையை நடைமுறைப்படுத்த ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், டாஸ்மாக் கடைகளில் இடம் சிறிதாக இருப்பதால் பில்லிங் இயந்திரம் வைக்க முடியவில்லை எனவும் கூறினார்.