
பாடகி சுசித்ரா மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவோடு நடிகை த்ரிஷாவை ஒப்பிட்டு சமீபத்தில் பேசியிருந்தார். இது சினிமா வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கட்சியில் த்ரிஷா இணைய இருப்பதாகவும் பாடகி சுசித்ரா கூறியிருந்து சமூகவலைதளங்களில் விவாதமானது.
இந்த நிலையில், த்ரிஷா தன்னுடைய எக்ஸ் பதிவில், “நீங்கள் ஏதேனும் ஒன்றை தவிர்க்க வேண்டும் என நினைத்தால் உங்களை பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டு கொள்ளாதீர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.