இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் அனைத்து விவரங்களையும் எப்போதும் அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இதனை அரசு இ சேவை மையங்கள் மூலம் கட்டணமில்லாமல் இலவசமாக புதுப்பித்துக் கொள்ள முடியும்.

அதற்கு வருகின்ற ஜூன் 14ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஒருவேளை அப்டேட் செய்ய தவறினால் ஆதார் கார்டு ரத்து செய்யப்படும் என்றும் சில தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது. அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள UIDAI அமைப்பு, புதுப்பிக்க தவறுபவர்களுக்கு ஆதார் கார்டு ரத்து செய்யப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளது. மேலும் ஜூன் 14ஆம் தேதிக்குள் ஆதார் கார்டு புதுப்பிக்கவில்லை என்றால் அதன் பிறகு கட்டணம் வசூலிக்கப்பட்டு இந்த பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இன்னும் சில நாட்கள் மட்டுமே இருப்பதால் உடனே உங்கள் ஆதார் கார்டை புதுப்பித்து விடுங்கள்.