துணிகளை துவைப்பதும் சுத்தமாக வைத்திருப்பதும் தனிப்பட்ட சுகாதாரத்தின் ஒரு பகுதியாக மட்டுமல்லாமல் துணிகளை நீண்ட கால பயன்பாட்டிற்காக சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் பயன்படுத்தும் பல வகையான ஆடைகளை ஒவ்வொரு பயன்பாட்டிற்கு பிறகும் எப்படி பராமரிக்க வேண்டும் என்பதில் சில மாறுபாடுகள் உள்ளன.

அதன்படி ஜீன்ஸ் பேண்டை பலமுறை பயன்படுத்திய பிறகு மட்டுமே அவற்றை துவைத்தால் போதும். அதிகப்படியாக துவைத்தால் அவை மங்கி விடும். எனவே ஜீன்ஸை நான்கு அல்லது ஆறு முறை பயன்படுத்திய பிறகு தான் துவைக்க வேண்டும். ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் கறை படிந்த பகுதியை மட்டும் கழுவி உலர்த்தினாள் போதும்.

ஒவ்வொரு பயன்பாட்டுக்கு பிறகும் உள்ளாடைகளை கட்டாயம் துவைக்க வேண்டும். ஏனென்றால் இதனை அணியும் போது உடலில் உள்ள அழுக்குகள் இதன் மீது படிந்து விடும். எனவே ஒவ்வொரு பயன்பாட்டுக்கு பிறகும் அவற்றை துவைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஆனால் லேசான சோப்பு அல்லது பொடி கொண்டு சுவைத்தால் மட்டுமே போதுமானது.

அடுத்ததாக கால் உறைகளில் பாக்டீரியாக்கள் விரைவாக வளர்ந்து துர்நாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் கால் உரைகளை தவறாமல் தினமும் துவைப்பது அவசியம். ஒவ்வொரு பயன்பாட்டிற்கு பிறகும் குறிப்பாக உடல் செயல்பாடுகளின் போது சாக்ஸை முடிந்தவரை துவைத்து விட வேண்டும்.

ஒவ்வொரு பயன்பாட்டுக்கு பிறகும் சட்டைகளை துவைப்பது தனிப்பட்ட சுகாதாரத்திற்கு சிறந்ததாகும். அதிலும் குறிப்பாக வெப்பமான காலநிலை போன்றவற்றில் அணியும் சட்டைகள் சாதாரண சட்டைகளை ஒன்று அல்லது இரண்டு பயன்பாட்டுக்கு பிறகு துவைத்து விட வேண்டும். ஒவ்வொரு துணிக்கான கையேடு குறிப்பு படி சட்டைகளை துவைப்பதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மேலும் சூடான தண்ணீரில் இவற்றை துவைக்க கூடாது.