
நடிகர் வடிவேல் சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவர் அளித்துள்ள பேட்டியில் உருக்கமாக பேசியுள்ளார். அதாவது அப்பொழுது கவுண்டமணி செந்தில் இருக்கும் நேரம். என்னுடைய வாழ்க்கையில் சோறு போட்ட கடவுள் என்னை வாழ வைத்த தெய்வம் ராஜ்கிரன் தான்.
எங்க அம்மா அப்பாவிற்கு அப்புறம் ராஜ்கிரன் தான் .அந்த ராஜ்கிரன் அவரோட ஆபீஸ்லயே எனக்கு சாப்பாடு போட்டு பெத்த பிள்ளை மாதிரி பார்த்து கிட்டாரு. கவுண்டமணி செந்தில் இருக்கும்பொழுது என்ன அவர் உள்ள விட்டார் என்று நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.