பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் தான் மணிமேகலை. அதன் பிறகு படிப்படியாக வளர்ச்சி கண்டு விஜய் தொலைக்காட்சியில் டாப் நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வளம் வந்தார். அதனை தொடர்ந்து கோமாளியிலிருந்து விலகி  அதே நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து வந்தார். இதற்கிடையில் இவருக்கும், பிரியங்காவோடு ஏற்பட்ட வாய் தகராறு காரணமாக அந்த தொலைக்காட்சியில் இருந்து விலகிவிட்டார்.

இப்படி ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும் அவர் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்தநிலையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் இருந்து விலகிய மணிமேகலை ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு சென்று விட்டாராம். அந்த தொலைக்காட்சியில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக களம் இறங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.