தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் செறிஊட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் பையில் எச்சரிக்கை வாசகம் இடம் பெறாதது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் செறி ஊட்டப்பட்ட அரிசி விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு திட்டத்தின் கீழ் இந்த அரிசி விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் மத்திய அரசு விதிகளின்படி தலை சீனியா மற்றும் அமினியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி இந்த அரிசியை உண்ண வேண்டும்.

எனவே இது குறித்த எச்சரிக்கை வாசகம் அந்த அரிசி வழங்கப்படும் பைகளில் இடம்பெற செய்ய வேண்டும் எனவும் ஆனால் அது போன்ற எந்த எச்சரிக்கை வாசகமும் இல்லாமல் இந்த அரிசி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனைப் பின்பற்றாமல் ரேஷன் கடைகளில் இந்த அரிசியை விநியோகிக்க கூடாது என உத்தரவிட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையில் அரசு தரப்பில் இந்த அரிசி அடைக்கப்பட்டுள்ள சாக்கு பையில் எச்சரிக்கை வாசகம் இடம் பெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பான எச்சரிக்கை வாசகம் நுகர்வோருக்கு எப்படி தெரியும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் செப்டம்பர் 21ஆம் தேதிக்குள் இந்த மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.