இந்திய ரயில்வே நிர்வாகம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறப்பு சுற்றுலா தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி நீங்கள் வருகிற ஏப்ரல் மாதம் குளிர்ச்சியான நகருக்கு செல்ல விரும்பினால் இந்திய ரயில்வே நிர்வாகம் உங்களுக்கு சூப்பரான ஆஃபரில் சுற்றுலா செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நீங்கள் ஸ்ரீ நகர், பஹல்காம், குல்மார்க் மற்றும் சோனாமார்க் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லலாம். இந்த சுற்றுலா தொகுப்புடன் காலை மற்றும் இரவு உணவுகளும் இலவசமாக வழங்கப்படும். இந்த சுற்றுலாவில் பயண காலம் 5 இரவுகள் அல்லது 6 நாட்கள் ஆகும். சுற்றுலா செல்லும் பயணிகள் குல்மார்க், பஹல்காம், ஸ்ரீநகர், சோனாமார்க் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அதன் பிறகு சுற்றுலா புறப்படும் தேதி ஏப்ரல் 9, 16, 19, 23, 30 போன்றவைகள் ஆகும்.

இந்த சுற்றுலா செல்வதற்கு ஒரு நபருக்கு குறைந்தபட்சம் ரூ. 59,800 செலவாகும். அதன் பிறகு இரு முறை தங்குவதற்கு ஒரு நபருக்கு 43,300 ரூபாயும், மூன்று முறை தங்குவதற்கு 42,000 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும். இது தவிர 5 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு படுக்கை வசதியுடன் 39,400 ரூபாய் கட்டணமும், படுக்கை வசதி இல்லாமல் 34,400 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும். மேலும் சுற்றுலா பயணிகள் ஸ்பைஸ் ஜெட் விமான மூலம் அழைத்துச் செல்லப்படுவார்கள். முதலில் விமான மூலம் மும்பையில் இருந்து ஸ்ரீநகருக்கு பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள். இரண்டாம் நாளில் ஸ்ரீ நகரில் இருந்து பகல் ஹாம் பகுதிக்கும் நான்காம் நாளில் ஸ்ரீ நகரில் இருந்து சோனா மார்க் பகுதிக்கும் ஐந்தாம் நாளில் குல்மார்க் பகுதிக்கும் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.