வீராணம் ஏரியில் நீர்மட்டம் குறைந்ததால் சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் உருவாகியுள்ளது. இந்த ஏரியின் நீர்மட்டத்திற்கு ஏற்ப சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு வீராணத்தில் இருந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. வீராணம் ஏரியில் 39 அடிக்கு கீழ் நீர்மட்டம் குறைந்தால், பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கமுடியாது.

அதேபோல் சென்னைக்கும் குடிநீர் அனுப்பமுடியாது. இந்த நிலையில் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 38.50 அடியாக நேற்று குறைந்தது. இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக சென்னை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.