செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது.

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டதாக செந்தில் பாலாஜி மனைவி வழக்கு தொடர்ந்து உள்ளார். சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவி மனு அளித்துள்ளார்.  சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக காவலில் எடுத்ததாக அவரது மனைவி மேகலா தொடர்ந்த வழக்கு தொடர்பாக 2 நீதிபதிகள் அடங்கி அமர்வு நாளை தீர்ப்பு வழங்குகிறது. குறிப்பாக நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நாளை சரியாக 10:30 மணி அளவில் தீர்ப்பானது வழங்கப்பட உள்ளது..

குறிப்பாக செந்தில் பாலாஜியுடைய மனைவி மேகலா அவர்கள் சட்ட விரோதமாக தனது கணவர் கைது செய்யப்பட்டதாக வழக்கு தொடர்ந்திருந்தார்.. அமலாக்கத் துறையின் விளக்கங்களையும், மனுதாரரின் விளக்கங்களையும் இதற்கு முன்பாக கேட்ட நீதிபதிகள் தீர்ப்பு தேதியை ஒத்தி வைத்தனர்.. இந்நிலையில் தீர்ப்பு தேதியை  நீதிபதிகள் அறிவித்தனர்..

தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டது. நாளை சரியாக 10:30 மணியளவில் இந்த தீர்ப்பு வாசிக்கவுள்ளதாக தெரிய வருகிறது இது முக்கியமான தீர்ப்பாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை  கைது செய்த நிலையில், சிகிச்சைக்கு பெற்று வரக்கூடிய இந்த சூழ்நிலையில் இந்த தீர்ப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.