சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் இணைந்துள்ளார். பாலிவுட் நடிகர் பாபி தியோலின் பிறந்தநாளையொட்டி, ‘கங்குவா’ திரைப்படத்தில் அவர் நடித்துள்ள ‘உதிரன்’ கதாபாத்திரத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஸ்டுடியோ கிரீன், யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் திஷா பதானி, நட்டி, ஜகபதி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், மாரிமுத்து, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மிக பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் இப்படம், இந்த ஆண்டு கோடையில் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.