அக்டோபர் மாதத்தில் இருந்து சீனாவில் பல குழந்தைகளுக்கு சுவாச கோளாறு போன்ற நுரையீரல் நோய்க்கான அறிகுறிகளோடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பானது விளக்கம் கேட்டிருந்த நிலையில் இது குறித்து சீன அரசு கூறுகையில், சீனாவில் புதிய தொற்று நோய் கிருமி பாதிப்பு எதுவும் கண்டறியவில்லை. குழந்தைகளுக்கு சுவாச கோளாறுகளுக்கு காரணம் மருத்துவத் துறையினருக்கு ஏற்கனவே தெரிந்த நிமோனியா தாக்குதல் தான் என்று விளக்கம் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் உள்ளதா? என்று தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை ஈடுபட்டனர். இதனையடுத்து நிமோனியா தொற்று குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் தமிழகத்திலும் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.