தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் தன்னுடைய கட்சியை தேசிய அளவில் வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதோடு, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி என்ற தன்னுடைய கட்சியின் பெயரை பாரத  ராஷ்ட்ரிய சமிதி கட்சி என்று மாற்றி தேர்தல் ஆணையத்திடமும் ஒப்புதல் வாங்கி விட்டார். இந்நிலையில் மராட்டிய மாநிலத்தில் உள்ள நான்டெட் நகரில் நடைபெற்ற ஒரு பொதுக்குழு கூட்டத்தில் கே. சந்திரசேகர் ராவ் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்தியாவில் சரக்கு ரயில்களின் வேகம் சீராக இல்லாவிட்டால் நாம் பிற நாடுகளுடன் எப்படி போட்டியிட முடியும்.

இந்தியாவில் சரக்கு ரயில்களின் சராசரி வேகம் 24 கிலோமீட்டராக இருக்கும் நிலையில், சீனாவில் சரக்கு ரயில்களில் சராசரி வேகம் மணிக்கு 120 கிலோமீட்டராக உள்ளது. அதன் பிறகு அமெரிக்காவில் 78 கிலோ மீட்டராகவும், இங்கிலாந்தில் 75 கிலோமீட்டர் ஆகவும் இருக்கிறது. இவர்களுடன் நாம் எப்படி போட்டியிட முடியும். நாட்டில் ஒவ்வொரு ஏக்கர் நிலத்திற்கான நீர் பாசன வசதிகள் போதுமான அளவு இருக்கிறது. அடுத்த 100 வருடங்களுக்கு இந்தியாவில் நன்னீருக்கு பஞ்சம் இருக்காது. அப்படி இருக்கும்போது மாநிலங்கள் எதற்காக தண்ணீர் காக அடித்துக் கொள்கிறது என்று கேள்வி எழுப்பினார்.