வேலூர் மாவட்டம் சின்னராஜ குப்பத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி விஷ்ணு பிரியா தன்னுடைய தந்தையின் குடிப்பழக்கத்தால் குடும்பத்தின் மகிழ்ச்சி சீர்குலைந்ததை தாங்கி கொள்ள முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் தன்னுடைய குடும்பம் எப்பொழுது சந்தோஷமாக இருக்கிறதோ அப்பொழுதுதான் தன்னுடைய ஆத்மா சாந்தி அடையும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.  இதனைத்தொடர்ந்து அரசியல்  தலைவர்கள் பலரும் மதுவிலக்கை அமல்படுத்த கோரிக்கை  வருகின்றனர்.

இந்நிலையில் மதுப் பழக்கத்தை மக்கள் கைவிடுவதற்காக தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்த் யோசனை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தந்தை குடிப்பழக்கத்தை கைவிட வேண்டும் என்பதற்காக தற்கொலை செய்து கொண்ட சிறுமியின் போட்டோவை அனைத்து மது பாட்டிலிலும் ஒட்டுங்கள். அனைத்து டாஸ்மாக் கடை முன்னாடியும் வையுங்கள். அதைப் பார்த்து ஒவ்வொரு தந்தையும் மதுப் பழக்கத்தை கைவிட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.