சிறந்த நடிகரும், அர்ப்பணிப்புள்ள தலைவருமான, சிறந்த மனிதநேயவாதியான திரு அவர்களின் மறைவு ஆழ்ந்த வேதனை அளிக்கிறது என்று ஆளுநர் ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்..

சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவு தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜயகாந்த் நுரையீரல் அழற்சி காரணமாக வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமானார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். ஆளுநர் அலுவலகம் தனது எக்ஸ் பக்கத்தில், சிறந்த நடிகரும், அர்ப்பணிப்புள்ள தலைவருமான, சிறந்த மனிதநேயவாதியான திரு அவர்களின் மறைவு ஆழ்ந்த வேதனை அளிக்கிறது. விஜயகாந்த். சினிமா, அரசியல், சமூக சேவை ஆகியவற்றில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும். எனது பிரார்த்தனைகள் அவரது குடும்பத்தினருடனும் எண்ணற்ற ஆதரவாளர்களுடனும் உள்ளன. ஓம் சாந்தி!- கவர்னர் ரவி” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் இருந்து விஜயகாந்த் உடல் வடபழனி வழியாக அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அஞ்சலிக்காக விஜயகாந்தின் உடல் வைக்கப்பட உள்ளது.