சென்னையில் சாலையோரம் பச்சிளம் பெண் குழந்தை பையில் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பூவிருந்த பள்ளி அருகே மலையம்பாக்கம் பகுதியில் இன்று சாலையோரம் பையில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்டெடுக்கப்பட்டுள்ளது. குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கு சென்று பொதுமக்கள் அந்த குழந்தையை மீட்டனர். பின்னர் குழந்தைக்கு முதலுதவி அளிக்கப்பட்ட காப்பகத்தில் சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குழந்தையை வீசி சென்றது யார் என்பது குறித்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.