தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் இன்று காலை நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்து தன்னுடைய ஜனநாயக கடமையை ஆற்றினார். இந்நிலையில் அவர் தற்போது ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதாவது தேர்தலில் வாக்களித்து நான் என்னுடைய ஜனநாயக கடமையை ஆற்றி விட்டேன். எனவே நீங்களும் தேர்தலில் வாக்களித்து உங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றுங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் என்ற படத்தில் நடித்துவரும் நிலையில் அந்த படம் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.