தமிழகத்தில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெல்லும் வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்குவதற்கான அரசாணை தற்போது தமிழக அரசு வெளியேற்றுள்ளது. தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்லும் மாற்றுத்திறனாளி வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கும் பிரிவு இடம்பெறவில்லை. இந்த குறையை கண்டறிந்து அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து முதல்வர் வழிகாட்டுதலின்படி தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் மாற்றுத்திறனாளி வீரர் வீராங்கனைகளுக்கு மூத்தோர் பிரிவில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் வெல்பவருக்கும் உயரிய ஊக்கத் தொகைகள் முறையை 5 லட்சம், மூன்று லட்சம் மற்றும் இரண்டு லட்சம் எனவும், இளையோர் பிரிவில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் வெல்பவருக்கு உயரிய ஊக்க தொகைகள் முறையே 3 லட்சம், இரண்டு லட்சம் மற்றும் 1.50 லட்சம் எனவும் வழங்குவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.