அதிமுக முன்னாள் கவுன்சிலர் உள்ளிட்ட 8 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலையில் கனிமவளக் கொள்ளையை எதிர்த்த சமூக ஆர்வலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை நீதிமன்றம் 8 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சாட்சியங்கள் முன்னுக்கு பின் முரணாக உள்ளன, குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை என நீதிபதிகள் எம்.எஸ் ரமேஷ் மற்றும் சுந்தர்மோகன் தெரிவித்தனர்.  2012 ஆம் ஆண்டு சமூக ஆர்வலர் ராஜ்மோகன் சந்திரா வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதிமுக முன்னாள் கவுன்சிலர் திருப்பதி பாலாஜி என்ற வெங்கடேசன், அவரது தந்தை வீராசாமி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். கொலை வழக்கு விசாரணை நடைபெற்ற போது வீராசாமி, செல்வம் ஆகியோர் உயிரிழந்துவிட்டனர்.