கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ஆக உயர்த்தப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் அண்ணா பல்கலையில் ஆலோசனை நடத்திய பின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாயாக  உயர்த்தப்படும்.

பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் ஒரே மாதிரி பாடத்திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. மாணவர்களும், பேராசிரியர்களும் கல்லூரி மாறும் போதும் ஒரே பாடத்திட்டம் பயனளிக்கும். தமிழக பல்கலை கல்லூரிகளின் தரத்தை உலக அளவில் உயர்த்துவதே எங்கள் இலக்கு என தெரிவித்துள்ளார்.