ஜப்பானில் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது என்று கூறப்படுகிறது. இது அந்நாட்டில் கவலையான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்த 2010 ஆம் ஆண்டு Itochu Corpன் CEO இரவு வேலைகளுக்கு தடை விதித்தார். அந்த நிறுவனம் எடுத்த முடிவால் மார்ச் 31, 2022 ஆம் ஆண்டு படி, நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு பெண் ஊழியருக்கு சராசரியாக 2 குழந்தைகள் பிறந்தன.

இதனை தொடர்ந்து தினமும் இரவு 8 மணிக்கு அலுவலகம் மூடப்பட்டது. மேலும் கூடுதல் நேரம் அலுவலகத்தில் வேலை பார்க்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த யோசனை பலனளித்த காரணத்தினால் தற்போது ஜப்பானின் பிறப்பு விகிதம் 1.3 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.