குஜராத் டைட்டன்ஸ் அணியில் முகமது ஷமிக்கு பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்பட்டார்.

ஐபிஎல் 2024 க்கு வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு பதிலாக மாற்று வீரரை குஜராத் டைட்டன்ஸ் அணியில் சேர்த்துள்ளது. ஷமிக்கு சமீபத்தில் வலது குதிகாலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது ஷமி ஓய்வில்  இருக்கிறார். ஷமிக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் வாரியரை குஜராத் டைட்டன்ஸ் அணியில் சேர்த்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு ஷமி கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்தார். காயம் காரணமாக ஷமியால் சமீபத்தில் நடந்த இந்தியா – இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட முடியவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மார்ச் 24-ம் தேதி தனது போட்டியை தொடங்குகிறது.

ஐபிஎல் நிர்வாகக் குழு சார்பில், முகமது ஷமிக்கு பதிலாக சந்தீப் வாரியரை குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்துள்ளது. இந்தியாவின் அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் ஷமிக்கு சமீபத்தில் வலது குதிகாலில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சந்தீப் வாரியருக்கு 5 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளது. ஜிடி இவரை அடிப்படை விலையான ரூ.50 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக சந்தீப் வாரியர் இதுவரை 5 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் ஐபிஎல் 2023 இல் மும்பை இந்தியன்ஸுடன் இணைந்தார். முன்னதாக, அவர் 2019 முதல் 2021 வரை கொல்கத்தா அணியில் இருந்தார்.