இந்த சிஎஸ்கே வீரர் தான் இந்திய அணியின் எதிர்காலம் என்று  பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் உறுதியாக தெரிவித்துள்ளார்..

இந்த ஆண்டு ஐபிஎல் பதினாறாவது சீசன் முடிவடைந்த பிறகு, இந்திய வெள்ளை பந்து கிரிக்கெட்டுக்கான எதிர்கால தொடக்க வீரர்களுக்கான போட்டி பெரிய அளவில் அதிகரித்துள்ளது!. சுப்மன் கில் தற்போது ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டுக்கான இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேனாக நிரந்தர இடத்தைப் பிடித்துள்ளார்.தற்போது நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் 17 போட்டிகளில் விளையாடி 147 ஸ்டிரைக் ரேட்களுடன் 3 சதங்களுடன் 890 ரன்கள் குவித்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இடது கை தொடக்க பேட்ஸ்மேனான ஜெய்ஸ்வால், சிறப்பான பார்மில் இருந்து, 14 போட்டிகளில் 164 ஸ்டிரைக்குகளுடன் ஒரு சதத்துடன் 625 ரன்கள் எடுத்துள்ளார்.தற்போது இந்திய டி20 கிரிக்கெட் அணியில் கில்லுடன் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வரும் இஷான் கிஷன் 16 போட்டிகளில் 142 ஸ்டிரைக்களுடன் 454 ரன்கள் எடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு ஐபிஎல் முடிந்த பிறகு, இந்திய டி20 அணியில் தொடக்க ஆட்டக்காரராக சில வாய்ப்புகளைப் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ், இந்த ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் 147 ஸ்டிரைக் ரேட்டுடன் மொத்தம் 590 ரன்கள் எடுத்துள்ளார்.இந்த வழியில், இந்திய ஒயிட்-பால் கிரிக்கெட்டுக்கான தொடக்க ஆட்டக்காரர்களுக்கான இடத்துக்கு இப்போதும், எதிர்காலத்திலும் பெரும் போட்டி நிலவுகிறது.

இதுபற்றி பேசிய பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் அழுத்தத்தில் மிக சிறப்பாக விளையாடினார். அவரது சிறப்பான உடல் தகுதி அவருக்கு ப்ளஸ் பாயிண்ட்.மேலும் அவர் ஒரு சிறந்த பீல்டர். அவருக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. இந்திய அணியிலும், ஐபிஎல் டி20 தொடர் அணியிலும் சிறப்பாக செயல்பட்டு, சிறப்பான இடத்தைப் பிடிப்பார் என்று தெரிவித்தார்..