பொதுவாகவே நாம் காலையில் குளிப்பதை தான் வழக்கமாக வைத்திருப்போம். காலையில் குளித்தால் உடலில் புத்துணர்ச்சி ஏற்படும். உற்சாகமாகவும் இருக்கும். ஆனால் சீனா,  ஜப்பான், கொரியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள மக்கள் இரவில் குளிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என்னஎன்றால் ஆசிய நாடுகளில் சீனா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் இரவில் குளிப்பதற்கான காரணம் தினசரி சுகாதாரத்தின் இன்றியமையாததாக கருதப்படுகிறது .

இந்த இரவு குளியல் பகலில் வெயிலில் சென்று வரும்போது உடலில் நுண்கிருமிகள் ஒட்டிக் கொண்டிருந்தால் அவற்றை சுத்தப்படுத்தி நிம்மதியான உறக்கத்தை கொடுப்பதால் இதை வழக்கமாக வைத்துள்ளார்கள். ஒவ்வொரு நாளும் பணிகளில் ஈடுபடும் மக்கள் அதிக வியர்வை சிந்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பதற்கு இந்த இரவுக்கு குளியல் முக்கிய பங்காற்றுவதாக சீனர்கள் கருதுகிறார்கள் . இதனால் காலை முதல் இரவு வரை தொடர்ந்து வேலை செய்துவிட்டு வேலை முடிந்து ஓய்வு எடுக்கும் நேரத்தில் குளிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.