இன்றைய காலகட்டத்தில் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் நம்முடைய வாழ்க்கையில் யாருக்கு எப்போது என்ன நடக்கும் என்பது குறித்து தெரியாது. எனவே நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது மிக அவசியம். நமக்குப் பிறகு நம்முடைய குடும்பத்தை யார் பார்த்துக் கொள்வார்கள்? திடீரென்று ஏற்படும் மருத்துவ செலவு எப்படி சமாளிப்பது? நாம் சேமித்து வைத்த பணம் கூட சில நேரங்களில் காணாமல் போகும். இதனால்தான் முன்கூட்டியே நிதிச் செலவுகளை சமாளிக்க காப்பீடு போன்ற ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

சுகாதார காப்பீடு என்பது சுகாதார அவசர காலத்தில் பாலிசிதாரர்களுக்கு ஏற்படும் மருத்துவ செலவுக்கான பாதுகாப்பை கொடுக்கிறது. பகல் நேர பராமரிப்பு செலவுகள், முக்கியமான நோய் செலவுகள் உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்கு பாதுகாப்பு வழங்குகிறது. சுகாதார அவசரநிலை செலவுகள் எப்போது வரும் என்று தெரியாது. ஓய்வற்ற வாழ்க்கை முறைகளால் அதிகமான மக்களுக்கு நோய்கள் வருகின்றன. தரமான சுகாதார செயல்களுக்கான தேவை அதிகரித்து வருவதால் மருத்துவ சிகிச்சை தற்போது மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கிறது.

சுகாதார காப்பீடு திட்டம் என்பது முக்கியமான தேவையாக உள்ளது. ஒருவர் உடல் வலிமையோடும், ஆரோக்கியத்தோடும் இருக்கும் பொழுதே இந்த காப்பீட்டு திட்டத்தை பெறுவது சரியான நேரம். இந்த காப்பீடு திட்டத்தை குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சேர்த்து அல்லது குழுவாகவும் எடுக்க முடியும். இது அவரவரின் தனிப்பட்ட விருப்பம்.