கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்கள் விமானங்கள் இயக்கப்படுகிறது. நேற்று காலை 7 மணிக்கு 164 பயணிகளுடன் விமானம் கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு புறப்பட்டது. இந்நிலையில் பறக்க தொடங்கிய சில நிமிடங்களிலேயே இடது எஞ்சினில் 2 கழுகுகள் பறந்து வந்து பலமாக மோதியது. மேலும் மோதிய வேகத்தில் ஒரு கழுகு என்ஜினுக்குள் சிக்கியது. இதனால் விமானி சாதூர்யமாக செயல்பட்டு அவசர அவசரமாக விமானத்தை தரையிறக்கியதால் 164 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டனர்.

இதனையடுத்து பொறியாளர்கள் வந்து விமானத்தை ஆய்வு செய்தபோது கழுகு மோதியதால் என்ஜின் சேதம் அடைந்ததும், இறந்த நிலையில் என்ஜினுக்குள் கழுகு சிக்கி இருப்பதும் தெரியவந்தது. பின்னர் தனி விமானம் மூலம் உதிரி பாகங்கள் கொண்டுவரப்பட்டு விமானத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.