இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அதனால் அரசு இது தொடர்பாக தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது கல்வி உதவித்தொகை தருவதாக கூறி ஆன்லைன் மூலம் பல லட்சம் மோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளதாக கோவை மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர். 10, 12 ஆம் வகுப்பு படித்த மாணவ மாணவிகள் குறித்த தகவல்களை ஒரு கும்பல் திரட்டி உள்ளது.

சம்பந்தப்பட்ட மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கு அவர்கள் போன் செய்து அரசு சார்பாக கல்வி உதவித்தொகை பெற தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறி பெற்றோரின் whatsapp எண்ணுக்கு போன் செய்த அவர்கள் இந்த கல்வி உதவித் தொகையை பெற 2000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் qr ஸ்கேன் கோடு whatsapp நம்பருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறினர். இதனை நம்பி பெற்றோரும் அந்த whatsapp எண்ணுக்கு 2000 ரூபாய் செலுத்தி மர்ம நபர்களை நம்பி ஏமாந்துள்ளனர். எனவே இது போன்ற செய்திகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என அரசு எச்சரித்துள்ளது.