ஐக்கிய அரபு அமீரகத்திலேயே மிகவும் புகழ் பெற்றது என்றால் அது துபாய் தான்.   ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிக அளவில் இந்தியர்கள் வசித்து வந்தாலும் துபாயில்  இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம். அதிலும் தமிழர்கள் கணிசமான அளவு அங்கு வசித்து வருகிறார்கள். வேலைக்காகவும், கல்விக்காகவும் துபாய்க்கு அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் செல்கிறார்கள். தமிழர்களின் பாரம்பரிய  இனிப்புகளை துபாயில் பார்ப்பது அரிதாக இருந்த சூழலில் தமிழ்நாட்டில் இருந்து துபாய் செய்பவர்கள் தென் தமிழகத்தின் பாரம்பரிய இனிப்பு பொருளான கருப்பட்டி மிட்டாய் எடுத்துச் சென்றிருப்பார்கள் போலும்.

அதன் ருசியை கண்ட மற்ற மாநில இந்தியர்களும், வேறு நாடுகளை சேர்ந்தவர்களும், துபாய் காரங்களும் இதற்கு அடிமையாகி விட்டார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த தங்கள் நண்பர்கள் சொந்த ஊர் செல்லும் பொழுது நீ வருகிறாயோ இல்லையோ கருப்பட்டி மிட்டாய் வரவேண்டும் என்று கண்டிசனோடுதான் சில ஆண்டுகள் அவர்கள் அனுப்பி வைத்துள்ளனர். இதனால் தமிழ்நாட்டுக்கு வந்து துபாய் செல்வர்கள் கருப்பட்டி மிட்டாய்களை அதிகளவில் வாங்கி சென்ற நிலையில் இதனை தெரிந்து கொண்ட விருதுநகர் கருப்பட்டி மிட்டாய் வியாபாரிகள் துபாய்க்கு நேரடியாகவே கருப்பட்டி மிட்டாய் செய்ய வியாபாரம் சூடு பிடித்துக் கொண்டு போகிறது.