பிரபல பொழுதுபோக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர் மூலம் நாயகியாக என்ட்ரி கொடுத்தவர் ஸ்ருதி சண்முகப்பிரியா. கடந்த 2022 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான அரவிந்தை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அரவிந்த் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

திருமணம் ஆன ஓராண்டிலேயே அவரது கணவர் உயிரிழந்தது அனைவரையும் வேதனைக்கு உள்ளாக்கியது. இந்நிலையில் தனது கணவரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி ஸ்ருதி தனது இன்ஸ்டாவில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். தன்னுடைய உயிர் உள்ளவரை தான் அரவிந்த் ஸ்ருதி என்றும் அரவிந்த் என்னுடையவர் என்றும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.