ஈரோடு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் 32 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு, துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். வாக்குப் பதிவு பணியில் 1206 ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவை மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

ஈரோடு கிழக்கில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இடையன்காட்டுவலசு பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவதாக அதிமுக குற்றம்சாட்டி உள்ளது. குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் வாக்குச்சாவடி எண் 138, 139-இல் பண பட்டுவாடா செய்வதாகவும், கச்சேரி வீதி வாக்குச்சாவடியில் ஆதாரை ஆவணமாக ஏற்க மறுத்தது ஏன்? என கேள்வி எழுப்பியும் தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக கடிதம் எழுதி உள்ளது.