கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் ரூபாய் 33 கோடியில் கால்நடை தீவனம் தயாரிக்கும் ஆலை நிறுவ அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. கால்நடை தீவன தொழிற்சாலைக்கு நிர்வாக ஒப்புதல் அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கடலூர் திட்டக்குடியில் நாளொன்றுக்கும் 300 மெட்ரிக் டன் உற்பத்தி திறனில் கால்நடை தீவனம் தயாரிக்கும் ஆலைக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ரூபாய் 33 கோடி திட்ட மதிப்பீட்டில் நபார்டு திட்டத்தின் கடனுதவியுடன் உதவியுடன் நிறுவ நிர்வாக ஒப்புதல் அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் 33 கோடி செலவில் கால்நடை தீவனத்திற்கு என்று தனி ஆலை ஒன்று உருவாக்கப்பட்டது. கால்நடை தீவனம் தயாரிப்பதற்காக அந்த ஆலையை கட்டுவதற்கு தேவையான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் 33 கோடி கால்நடை தீவனம் தயாரிக்கும் ஆலையானது உருவாக்கப்படவுள்ளது. நாளொன்றுக்கு 300 மெட்ரிக் டன் அளவிற்கு இந்த கால்நடைக்கான தீவனங்களை தயாரிப்பதற்கான அந்த முடிவு தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ளது.

தரமான கால்நடை தீவனம் வழங்குவதன் மூலம் பால் உற்பத்தியை அதிகரிக்க செய்வது இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். ஆற்றல் திறன் பசுமை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கார்பன் மாசு குறைக்க செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

ஏற்கனவே இதற்காக பணி தொடங்கிய நிலையில், அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக் அரசு. இந்த அரசாணையை வெளியிடப்பட்டுள்ள நிலையில் இனி அந்தப் பணிகள் மிக விரைவாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழகத்தை பொறுத்தவரை ஏறக்குறைய அனைத்து மாவட்டங்களிலும் கால்நடை மற்றும் அவற்றிக்கு தீவனம் என பல்வேறு தேவைகள் இருக்கின்றது. எனவே அவற்றுக்கு தேவையான தீவனத்தை வெளிநாட்டில் உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும் நாம் வாங்கி வரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. எனவே  தற்போது கடலூரில் அந்த ஆலை நிறுவப்படவுள்ளது.