கடல் கொள்ளையர்கள் எப்போதுமே ஒரு கண்ணை மூடியவாறு இருப்பார்கள். இதனை பல திரைப்படங்களிலும் நாம் அனைவரும் பார்த்திருப்போம். கடற்கொள்ளையர்கள் ஏன் ஒரு கண்ணை மட்டும் எப்போது மூடி வைத்துள்ளார்கள் என்று யாராவது சிந்தித்துப் பார்த்து உள்ளீர்களா. அதற்கான அறிவியல் காரணம் குறித்து இதில் பார்க்கலாம். கடற்கொள்ளையர்கள் கப்பலில் கொள்ளை இடுவார்கள். இது போன்ற நேரத்தில் கப்பலின் மேல் தளத்தில் சூரிய வெளிச்சம் இருக்கும். ஆனால் கப்பலின் கீழ்த்தளம் இருட்டாகவே இருக்கும். பொதுவாகவே மனிதர்களின் கண்களால் இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வரும்போது தெளிவாக பார்க்க முடிகின்றது.

ஆனால் வெளிச்சத்தில் இருந்து இருட்டுக்கு செல்லும் போது உடனே நம்மால் அதனை பார்க்க முடியாது. காரணம் வெளிச்சத்தில் இருந்து இருட்டான இடத்திற்கு செல்லும் போது நம்முடைய கண்களில் சுரக்கும் போட்டோ பிக்மென்ட் சுரக்க சுமார் 25 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளும். அதுவரை நம்மால் அங்கிருந்து எதையும் பார்க்க முடியாது. இதனால்தான் கடற்கொள்ளையர்கள் எப்போதும் ஒரு கண்ணை வெளிச்சத்தில் பார்ப்பதற்கும் மற்ற கண்ணை இருட்டில் பார்ப்பதற்கும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக ஒரு கண்ணை எப்போதும் மூடி வைத்துள்ளனர்.