ஓணம் பண்டிகையை முன்னிட்டு தாம்பரத்திலிருந்து மங்களூர் மற்றும் கொச்சு வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தாம்பரத்திலிருந்து வருகின்ற ஆகஸ்ட் 26 ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 2 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 9.30 மணிக்கு மங்களூரை சென்றடையும்.

அதனைப் போலவே தாம்பரத்திலிருந்து செப்டம்பர் இரண்டாம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 8 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும். பெங்களூரில் இருந்து வியாழக்கிழமை அதாவது ஆகஸ்ட் 24 பிற்பகல் 2.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 7.15 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.