எண்ணெய் மற்றும் மளிகை பொருட்கள் விலை உயர்வால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம்தோறும் 2000 ரூபாய் கூடுதல் செலவு ஏற்படுவதால் மக்களைக் காக்க தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தில் பருப்பு வகைகள், மஞ்சள் மற்றும் மிளகாய் தூள் ஆகியவற்றின் விலைகள் கிலோவுக்கு 15 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. எண்ணெய் விலைகள் லிட்டருக்கு 30 ரூபாய் வரை உயர்ந்துள்ளன.

இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் அளவை இரண்டு கிலோவாக உயர்த்த வேண்டும். மலிவு விலையில் உளுந்து வழங்க வேண்டும். மானிய விலையில் மளிகை பொருட்களையும் வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.