சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை பேசினார். அவர் பேசியதாவது, தமிழக அரசு 2022-23 ஆம் ஆண்டில் மத்திய அரசிடம் இருந்து ஒரு லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகன் மீதும் தலா 2.62 லட்சம் கடன் இருக்கிறது. இந்தியாவிலேயே அதிகமான கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் தான் இருக்கிறது. அதன்பிறகு தமிழக அரசு மக்கள் ஐடி என்ற ஒன்றை புதிதாக கொண்டு வர முயற்சி செய்கிறது.

இது ஆதார் செய்யாத வேலையை செய்யப் போகிறதா?. 99.5 சதவீதம் மக்களிடம் ஆதார் உள்ளது. பல்வேறு திட்டங்கள் ஆதார் மூலம் செயல்பட்டு வரும் நிலையில் தமிழக அரசு மக்கள் ஐடி மூலம் என்னென்ன செய்யப் போகிறது என்று கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் மட்டும் தான் வாரிசு அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிட வேண்டும் என்பதுதான் எங்களுடைய விருப்பம் என்று கூறினார். மேலும் மத்திய அரசின் கடன் 147.19 லட்சம் கோடியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.