உலக அளவில் மற்ற நாடுகளை விட இந்தியாவில் தங்கத்தின் உபயோகம் என்பது அதிகமாக உள்ளது. ஆனால் இந்த தங்க நகைகளை வைத்திருக்கும் வரம்பு குறித்து இந்திய சட்டத்தில் உள்ள விஷயம் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதாவது திருமணமான ஒரு பெண் 500 கிராம் தங்க நகைகளையும், திருமணம் ஆகாத பெண் 250 கிராம் வரையிலான தங்க நகைகளையும் வைத்திருக்கலாம் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறுகிறது. இதனைப் போலவே திருமணமான அல்லது திருமணம் ஆகாத ஆண் குடும்ப உறுப்பினர் 100 கிராம் வரை தங்க நகைகளை வைத்திருக்கலாம்.

ஒவ்வொரு குடும்ப உறுப்பினரின் வரம்புக்கும் குடும்பத்தில் உள்ள தங்க நகைகளுக்கும் கணக்கீடு செய்யப்பட வேண்டும். இந்த தங்க நகைகளை வாங்கியதற்கான நிதி ஆதாரங்கள் தொடர்பாகவும் அரசிடம் விவரங்களை தெரிவிக்க வேண்டும். ஆனால் இந்த தங்க கட்டுப்பாடு சட்டம் 1968 ஆம் ஆண்டு அமைதி இருந்ததாகவும் 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகு தங்க நகைகளை வைத்திருக்கும் வரம்பு குறித்து இந்திய அரசு எந்தவித சட்ட குறிப்புகளையும் அறிவிக்கவில்லை.