சீன நாட்டின் தெற்கில் ஹூனான் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் தலைநகரான சாங்ஷாவில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது யாரும் எதிர்பாக்காத நேரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் கார்கள், லாரிகள், டிரக்குகள் என 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்கியது.

இதில் பல வாகனங்கள் தீ பற்றி எரிந்தது. இந்த கோர விபத்தில் 16 பேர் உடல் நசுங்கியும் தீயில் கருகியும் பலியாகியுள்ளனர். மேலும் 60க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரின் நிலைமை கவலைகிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.