ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு இரண்டு லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்தபோது கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பாஹநாகா பஜார் ரயில் நிலையம் அருகே மற்றொரு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த கோர விபத்தில் பத்துக்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த ரயில் விபத்தில் இதுவரை 207-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ள நிலையில் 300க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.