
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி ச்ம்பியன் பட்டத்தை வென்ற நிலையில் அடுத்த ஐபிஎல் தொடர் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நவம்பர் மாத இறுதியில் மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் தங்களிடம் இருக்கும் வீரர்களில் குறைந்தபட்சம் 5 வீரர்கள் வரை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் எம்.எஸ் தோனி விளையாடுவாரா இல்லையா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. இது தொடர்பாக நாளைக்குள் ஒரு முடிவு அறிவிக்கப்படும் என்று சிஎஸ்கே அணியின் உரிமையாளர் காசி விஸ்வநாதன் தெரிவித்திருந்த நிலையில் தற்போது இது தொடர்பாக தோனி பேசியுள்ளார்.
அவர் கூறும் போது டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற்றதால் ஜடேஜா மற்றும் துபே ஆகியோருக்கு முன்வரிசையில் இடம் தரப்பட்டது. நான் பின் வரிசையில் விளையாடினாலும் மகிழ்ச்சியாக அணியினர் இருந்தார்கள். இதன் காரணமாக அடுத்த சில வருடங்களுக்கு விளையாட்டை அனுபவிக்க இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் கிட்டத்தட்ட தோனி விளையாடுவது உறுதியாகியுள்ளது. மேலும் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளது. அதில் அவர்கள் எந்தெந்த வீரர்களை தக்க வைப்பார்கள் என்பது குறித்து சில ஹிண்ட் கொடுத்துள்ளது. அதன்படி அவர்கள் தக்க வைக்கும் 5 வீரர்களுக்கு ஹிண்ட் கொடுத்துள்ளது. இந்த அடையாளங்களை வைத்து தற்போது சிஎஸ்கே தக்க வைக்கும் வீரர்களை ரசிகர்கள் கணித்து வருகிறார்கள். மேலும் இதில் ஹெலிகாப்டர் சிம்பிள் இருப்பதால் தற்போது கிட்டத்தட்ட எம்.எஸ் தோனி விளையாடுவது மட்டும் உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது.