
ஐபிஎல் தொடரில் வருகின்ற 18-ஆம் தேதி சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோத இருக்கும் நிலையில் எந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்ப்பு பலரது மத்தியில் நிலவுகிறது. இந்நிலையில் இம்முறை ஐபிஎல் கோப்பையை பெங்களூர் அணி வெல்வதற்கு வாய்ப்பு மிகக் குறைவாக இருக்கிறது என முகமது கைஃப் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஆரம்பத்தில் தோல்வியை சந்தித்தாலும் தற்போது அவர்கள் போராடி வெற்றி பெறுவது பாராட்டுக்குறியது.
இருப்பினும் அவர்கள் ஆரம்ப காலத்தில் தோல்வியடைந்ததால் பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. அவர்களின் கம்பேக்கை நிச்சயம் பாராட்டதான் வேண்டும். எனவே இனியாவது பெங்களூர் அணி நிர்வாகம் மேக்ஸ்வெல் போன்ற வெளிநாட்டு வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கொல்கத்தா அணிபோன்று இந்திய வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
கொல்கத்தா அணி இந்திய வீரர்கள் மீது அதிக முதலீடு செய்ததால் தான் தற்போது முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இது பெங்களூர் அணிக்கு அடுத்த வருடத்திற்கான நல்ல பாடமாகும். ராஜஸ்தான் அணியும் இதுபோன்று செயல்படுவதால் பெங்களூர் அணியும் அடுத்த வருடம் இதை பின்பற்ற வேண்டும். அவர்கள் எப்போதும் வெளிநாட்டு வீரர்கள் மீதுதான் அதிக மோகம் கொண்டிருக்கிறார்கள். மேக்ஸ்வெல் போன்ற வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் சாதிக்க முடியும் என்பதை அவர்கள் நம்ப வேண்டும். எனவே அவர்கள் இந்திய வீரர்கள் மீது இனி முதலீடு செய்தால் கண்டிப்பாக கோப்பையை வெல்வார்கள். மேலும் இதற்கு ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களை எடுத்துக்காட்டாக கூறலாம் என்று கூறினார்.