தமிழகம் மற்றும் கர்நாடகாவில் பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மக்களுடைய வாழ்வாதாரம் உயர்ந்துள்ளதாகவும் மாதத்திற்கு 1500 வரை சேமிக்க முடிவதாகவும் பெண்கள் தெரிவித்துள்ளார்கள். இதனை தொடர்ந்து கேரளாவிலும் மிகவும் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்காக மாநில அரசு இலவச பயணத்தை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் இலவச பயணத்தை மேற்கொள்ளலாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரள மாநிலத்தில் நிலவும் கடுமையான வறுமையை போக்கும் விதமாகவும், ஏழை குடும்பத்தைச் சார்ந்த மாணவர்களும் தங்கு தடைஇன்றி  படிப்பை தொடரும் நோக்கத்திலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த புதிய சலுகையானது நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.