ஜியோ மற்றும் ஏர்டெல் ஒரு வருடத்திற்கும் மேலாக 4G செலவில் வரம்பற்ற 5G இணையத்துடன் பயனர்களை கவர்ந்து வருகின்றன. இந்நிலையில் பயனர்களுக்கு ஆப்பு வைக்கும் வகையில் 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவைகளுக்கு 5 முதல் 10 சதவீதம் அதிக கட்டணம் வசூலிக்கத் தொடங்கும் என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்தியாவில் உள்ள மற்ற இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களான வோடபோன்-ஐடியா மற்றும் அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் ஆகியவை இன்னும் 5ஜி சேவைகளை தொடங்கவில்லை.