தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது “தேர்தலில் தோல்வியடைந்தாலும் நீண்ட கால நோக்கத்தில் தான் பேசி வருகிறேன். தூய்மையான அரசியலை முன்னெடுப்பதில் பின்னடைவு இருந்தாலும் எனக்கு கவலை இல்லை. தேர்தலில் பணம் கொடுத்து வெற்றிபெற்றாலும் எந்த பயனுமில்லை என நான் நினைக்கிறேன். தூய்மையான அரசியல் என்பதில் உறுதியாக உள்ளேன்.

ஏப்ரல் 14ஆம் தேதி அமைச்சர்களின் ஊழல் பட்டியல், ரபேல் வாட்ச் பில் ஆகியவை வெளியிடப்படும். நிர்மலா சீதாராமன் உடனான சந்திப்பில் அரசியல் கூட்டணி தொடர்பாக எதுவும் பேசவில்லை. தமிழகத்தில் புதிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்தி ஆக வேண்டும். இது காலத்தின் கட்டாயம் ஆகும். புதிய கல்விக்கொள்கையை தமிழகத்தில் கொண்டு வருவதை ஈகோ பிரச்சினையாக பார்க்கின்றனர்” என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.