தமிழகத்தின் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவர் தான் எச் ராஜா. பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் இருக்கும் இவர் பரபரப்பாகவும் ஆவேசமாகவும் பேசுவதில் பெயர் போனவர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட இவர் தோல்வி அடைந்தார். அடுத்த வருடம் நடைபெற உள்ள தேர்தலில் இவர் போட்டியிட கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக இவர் அறிவித்தது பாஜகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஏப்ரல் 10ஆம் தேதிக்கு பிறகு தமிழக அரசியலில் மாற்றம் நடக்கலாம் என எச் ராஜா கூறியுள்ளார். ஏப்ரல் 14ஆம் தேதி பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவார். அப்போதுதான் தமிழகத்தில் சிலரின் உண்மை முகம் தெரிய வரும். மேலும் மக்களைப் பற்றி கவலைப்படும் ஒரே கட்சி பாஜக தான் எனவும் உலகில் சிறந்த தலைவர் பட்டியலில் மோடி உள்ளார் எனவும் அவர் புகழாரம் பேசியுள்ளார்.