நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அது மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களை நலனுக்காக சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி தனது MCLR மற்றும் அடிப்படை வட்டி விகிதத்தை சற்று உயர்த்தியுள்ளது. அடிப்படை வட்டி விகிதம் 10.10 சதவீதத்தில் இருந்து 10.25% ஆகவும், MCLR விகிதம் 0.10% வரை உயர்த்தப்பட்டுள்ளது. டிசம்பர் 15ஆம் தேதி முதல் இந்த உயர்வு அமலுக்கு வருவதாக தனது இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதனால் வீட்டுக் கடன், வாகன கடன் மற்றும் இஎம்ஐ சுமை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.